முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

பிச்சைக்காரன் 2 டிக்கெட் வாங்க 2000ரூபாய் நோட்டை கொடுத்த நபர் : திரையரங்கத்தினர் வாங்க மறுத்ததால் வாக்குவாதம்

பிச்சைக்காரன் 2 டிக்கெட் வாங்க 2000ரூபாய் நோட்டை  சிலர் கொடுத்துள்ளனர். ஆனால  திரையரங்கத்தினர் அதனை வாங்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி கடந்த 23ம் தேதி  முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம். நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதனிடையே 2000 ரூபாய் நோட்டை  பொதுமக்கள்  பெட்ரோல் நிலையங்கள், மதுபான கடைகள், பேருந்துகள் மற்றும் ஆன்லைன் டெலிவரி உள்ளிட்டவற்றில் மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஏஜிஎஸ் திரையரங்களில் படம் பார்க்க வந்த இளைஞர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரையரங்க டிக்கெட் கவுண்டரில் உள்ளவர்கள்  வாங்க மறுத்துள்ளனர். இதனால் திரையரங்க ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அடுத்த போரூரைச் சார்ந்த கோதண்டராமன் என்பவர், தனது நண்பர்களுடன் பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை காண பிரபல  ஏஜிஎஸ் திரையரங்கிற்கு சென்றுள்ளார். சமீபத்தில் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கபட்ட  2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து 3 டிக்கெட்டுகள் கேட்டுள்ளார்.  ஆனால், அதனை வாங்க மறுத்த திரையரங்க ஊழியர்கள்  2ஆயிரம் நோட்டுகள் இங்கு வாங்கப்படாது என்று தெரிவித்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Halley Karthik

கம்பேக் கொடுக்கும் இசைப்புயல் – சியான்!

Vel Prasanth

சர்வதேச விமான கண்காட்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு- பிரதமர் மோடி

Jayasheeba