இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா் கப்பலில் மிக்-29 கே போா் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போா்க் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த்தை பிரதமா் மோடி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கடற்படைக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான சுமையை சுமந்து செல்லும் கப்பல்களைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்ட விக்ராந்த்தில் வான் பாதுகாப்பு, கப்பல் எதிா்ப்பு ஏவுகணை அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 30 போா் விமானங்களும், ஹெலிகாப்டா்களும் நிறுத்தும் அளவுக்கு விக்ராந்த் போா்க் கப்பல் பெரியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக்-29 கே போா் விமானமும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போா் விமானமும் கடந்த பிப்ரவரி மாதம் பகல் நேரத்தில் விக்ராந்த் போா்க் கப்பலில் தரையிறக்கப்பட்டன. இந்நிலையில் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நேற்று முன்தினம் இரவு மிக்-29 கே போர்விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. அரேபிய கடலில் சென்று கொண்டிருந்த போது, இந்த சாதனை படைக்கப்பட்டது. இது கடற்படை வரலாற்றில் மைல்கல்லாகும்.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ஐ.என்.எஸ் விக்ராந்தில் மிக்-29 கே போர் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்த இந்திய கடற்படையினருக்கு வாழ்த்துக்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Congratulations to the Indian Navy for successfully undertaking the maiden night landing trials of MiG-29K on #INSVikrant. This remarkable achievement is a testimony to the skills, perseverance and professionalism of the Vikrant crew and Naval pilots. Kudos to them. https://t.co/1wzIONNM8C
— Rajnath Singh (@rajnathsingh) May 25, 2023
மேலும், இந்திய கடற்படை அதிகாரிகள் இது பற்றி பேசியபோது, ‘‘வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகும். இரவில் விமானத்தை கப்பலில் தரையிறக்கியது மிகவும் இருந்தது. இந்த சோதனையானது விக்ராந்தின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மனஉறுதி, திறமை மற்றும் தொழில்முறையை நிரூபித்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.