இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 555 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது,
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை, சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 11,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 12,403 பேர் குணமடைந்துள்ளனர். குணமடை வோர் விகிதம் 98.26 % ஆக உள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,38,26,483 ஆக உயர்ந்துள்ளது. 555 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,63,245 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 1,36,308 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 274 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவு.
நாட்டில், இதுவரை 1,11,40,48,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,42,530 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.