மழை பெருவெள்ளத்தில் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியில், வெள்ள நிவாரண பணிகளை தொடர்ந்து கண்காணித்து, துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மழைநீர் இன்னும் முழுவதுமாக வடியாத சூழலில், அதிக அளவில் கொசுக்கள் உருவாகி நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதை தடுக்கும் வகையில் மருத்துவ முகாம், சென்னை முழுவதும் துவங்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இதுவரை 200 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.







