ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை இழுத்தடிக்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு வாதம்…!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை இழுத்தடிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு வாதிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகளான அஸ்வதம்மன், சிவா, அப்பு உள்ளிட்டோரின் ஜாமின் மேல்முறையீட்டு மனு மற்றும் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற ஆணை ஆகியவற்றை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை இன்று நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது குற்றவாளிகளின் தரப்பில், தமிழ்நாடு அரசின் பதில் மனுவுக்கு விளக்கம் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு வழக்கை இழுத்து அடிக்க கூடாது என்றும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவே தொடர வேண்டும் என்றும் வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் விளக்க மனு தாக்கல் செய்ய அஸ்வத்தம்மன், சிவா, அப்பு ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.