முதலமைச்சர் விஜய் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு…!

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.

தவெக தலைவர் விஜய் நேற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். முதலமைச்சராக பதவியேற்ற விஜய் பெரியார் திடலுக்கு சென்று தி.க. தலைவர் வீரமணியை சந்தித்தார். மேலும் அவர் பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா, அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்றக் கூட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் விஜயை, உதயநிதி ஸ்டாலின், எ.வா. வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி வரவேற்ற மு.க. ஸ்டாலின் பூங்கொத்து வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.