தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவை தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். மேலும் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.
விதிகளின் படி ஒருவர், இரு சட்டமன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏவாக தொடர முடியாது. அந்த வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற முதன்மை செயலாளர் சீனிவாசனிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் ஆகியோர் வழங்கினர்.







