இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் முதன் முதலில் கடந்த மாதம் 22ம் தேதி, தென்…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் முதன் முதலில் கடந்த மாதம் 22ம் தேதி, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு ஒம்கிரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு அவர்களுக்குச் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து தற்போது அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதே போல் இந்தியாவில் இதுவரை 358 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தற்போது 114 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்குத் தொற்று பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்து அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவைப் போலவே ஒமிக்ரான் தொற்றிலும் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.