முக்கியச் செய்திகள் உலகம்

தடுப்பூசி செயல்திறனை குறைக்கும் ஒமிக்ரான்

ஒமிக்ரான் வைரஸ் தொற்று தடுப்பூசிகளின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் என்றும் வேகமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தி வந்த நிலையில், தடுப்பூசிகள் தொற்று பாதிப்பை வெகுவாக குறைத்து உயிரிழப்புகளை கட்டுப்படுத்தின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கடந்த நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 63 நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஒமிக்ரான் தொற்றானது தடுப்பூசியின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் என்றும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் என்றும் உலக சுகதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அதேபோல இது டெல்டா வகை கொரோனா வைரஸ் போல அதிக வீரியமாக பாதிக்காவிட்டாலும் லேசான பாதிப்புடன் சமூக பரவலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவித்துள்ளன. இந்தியாவில் இதுவரை 38 பேருக்க ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்

EZHILARASAN D

காவேரியின் கூடுதல் தண்ணீர் சென்னை கொண்டுவரப்படும்: கே.என்.நேரு

Vandhana

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – அதிரடி நடவடிக்கை

Janani