உலக சிறுதானிய ஆண்டாக 2023ஐ அறிவித்தது ஐ.நா!

ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக இன்று அறிவித்துள்ளது.  ‘சர்வதேச தினை 2023’ என்ற தலைப்பில் இந்த தீர்மானம் இந்தியா, பங்களாதேஷ், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல்…

ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக இன்று அறிவித்துள்ளது. 

‘சர்வதேச தினை 2023’ என்ற தலைப்பில் இந்த தீர்மானம் இந்தியா, பங்களாதேஷ், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல் மற்றும் 70க்கும் மேற்பட்ட நாடுகள், 193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பொதுச் சபை சிறுதானியத்தின் மகத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
தினைகளின் காலநிலை-நெகிழ் திறன் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ‘சர்வதேச தினை 2023’ ஏற்படுத்துவதற்கும், அதிகரித்த நிலையான உற்பத்தி மற்றும் மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்க முறைக்கு இது வழிவகுக்கும்.

“தினை சாகுபடி வரலாற்று ரீதியாக பெரும்பாலும் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு இருந்தாலும், அவற்றின் உற்பத்தி பல நாடுகளில் குறைந்து வருகிறது. கம்புகளின் ஊட்டச்சத்து குறித்தும், அவற்றின் நன்மை குறித்தும் கம்பு உற்பத்தியாளர்கள், நுகர்வோருக்கு அறியபடுத்தபட வேண்டும். இதன் மூலம் கம்புகளின் உற்பத்தித் திறன் கூடும்.” என்று ஐக்கிய நாடுகளின் இந்தியாவின் பிரதிநிதியான டி.எஸ். திருமூர்த்தி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.