சிவகங்கை அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நரிக்குறவ இன மணமக்களுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது.
சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அங்கு அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

ஜோடி ஒன்றிற்கு அறநிலையத்துறை சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டில், பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. இந்த திருமண ஜோடிகளில் தனுஷ், விஜயலட்சுமி தம்பதி நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அனைத்து தம்பதியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என அனைவரும் வேற்றுமையை மறந்து சமபந்தியில் உணவருந்தியது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: