ட்விட்டர் ட்ரெண்டிங்கில் “காவாலா” பாடல் – VIBE அலையிலிருந்து வெளிவராத ரசிகர்கள்!

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “காவாலா” பாடல் ரசிகர்களால் யூடியூப்-ல் அதிகம் பார்வையிடப்பட்டு வரும் நிலையில், ட்விட்டர் ட்ரெண்ட்ங்கில் முதல் இடத்தில் உள்ளது. நெல்சன் திலிப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த்தை…

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “காவாலா” பாடல் ரசிகர்களால் யூடியூப்-ல் அதிகம் பார்வையிடப்பட்டு வரும் நிலையில், ட்விட்டர் ட்ரெண்ட்ங்கில் முதல் இடத்தில் உள்ளது.

நெல்சன் திலிப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் வரும்  ஆகஸ்ட் 10ஆம் தேதி  திரைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கிஷெரப், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். ஜெய்லர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வழக்கமாக நெல்சன் அனிரூத் கூட்டணியில் உருவாகும் பாடல்களில் வைப் – க்கு பஞ்சமே இருக்காது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நெய்வேலி ஹைதராபாத் கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திரைப்படம் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது, மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்பதால் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் முதல் பாடல் “காவாலா” தற்போது வெளியாகி ரசிகர்கள் களிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார் ;ஷில்பா ராவ் பாடியுள்ளார்.

இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில், வரும் ஒரு சில காட்சிகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் நடனத்தை அமைத்துள்ளனர். தற்போது இந்த பாடல் யூடியூப்-ல் 1 கோடியே 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.