திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று கழிவறையை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு பிளாஸ்டிக் பை இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, கழிவறையில் பிளாஸ்டிக் பை ஒன்று இருப்பதாக தூய்மைப் பணியாளர்கள் சுங்கத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தத் தகவலின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகள் கழிவறைக்குச் சென்று அந்த பிளாஸ்டிக் பையை பறிமுதல் செய்து, அதனை ஸ்கேன் செய்தனர். அந்தப் பையில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கழிவறையில் தங்கத்தை விட்டுச் சென்ற நபர் யார் என்பது குறித்து சுங்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக பேஸ்ட் வடிவிலான தங்கத்தை விமான நிலையத்திற்கு கடத்தி வருவது வழக்கம். ஆனால், பிளாஸ்டிக் பையில் தங்கத்தைக் கொண்டு வந்து அப்படியே வைத்துவிட்டு சென்ற சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.