டெல்லி: இருவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டெல்லி மாநிலத்தில் இரண்டு பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமாகி இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதையும் 2020 ஆம் ஆண்டு கொரோனா தன் கோர தாண்டவத்தால் நிலை குலைய…

டெல்லி மாநிலத்தில் இரண்டு பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமாகி இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதையும் 2020 ஆம் ஆண்டு கொரோனா தன் கோர தாண்டவத்தால் நிலை குலைய வைத்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அண்மையில் டெல்லியில் எடுக்கப்பட்ட ஜீரோ சர்வே முடிவுகள் வியப்பை ஏற்படுத்துக் கூடியதாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து மதிப்பீடு செய்வதற்காக டெல்லி அரசு பல முறை ஜீரோ சர்வே எடுத்தது. அதாவது, ஒரு நபரின் உடலில் இருந்து சோதனைக்காக ரத்தம் எடுக்கப்படும். பின்னர், ரத்தத்தில் கொரோனா வைரஸ் எதிர்த்துப் போரிடும் நோய் எதிர்ப்பு சக்தி (antibodies) உள்ளதா, இல்லையா என்பதை மருத்துவக் குழு ஆய்வு செய்யும்.

அதன்படி, 5ஆவதாக எடுக்கப்பட்ட சர்வேவில் டெல்லியின் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் 60 சதவிகிதம் பேருக்கு கொரோனாவை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோருக்கு இருந்துள்ளது. அதாவது, அவர்களுக்கே தெரியாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு பிறகு குணமாகிவிட்டனர்.

டெல்லி மாநிலத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். ஜீரோசர்வே ஒரு கோடிக்கு அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதன்பிறகு மீண்டுள்ளதைக் குறிக்கிறது. அந்த வகையில், டெல்லியில் இரண்டு பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்திருக்கலாம் என்பதைத்தான் சர்வே முடிவு தெரிவிக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply