கொரோனா காரணமாக, இந்திய வருகையை ரத்து செய்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினம் மிக சிறப்பாக நடைபெறும். இதை மேலும் சிறப்பிக்க வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அழைப்பையேற்று இந்தியா வருவதற்கு போரிஸ் ஜான்சன் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் இங்கிலாந்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த காரணத்தால் குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் பாராட்டியுள்ளார்.







