முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்? : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 72ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சாரண சாரணியர் இயக்க தலைமையகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். குறைவான காலத்தில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதால், வினாத்தாள் வடிவமைப்பில் எளிமை மற்றும் மாற்றம் கொண்டு வருவது குறித்து பெற்றோர்களின் கருத்துகளை கேட்ட பின்னர், முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்- முதலமைச்சர் மாணிக் ஷாகா

Jayasheeba

சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு ஓமலூரில் சத்துணவு கண்காட்சி

Web Editor

கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருகிறது: முதல்வர்!

Gayathri Venkatesan

Leave a Reply