ஏப்.1 முதல் ரூ.2000 மேல் UPI பண பரிவர்த்தனை செய்தால் 1.1% கட்டணம்..!

ஏப்ரல் 1 முதல் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல்…

ஏப்ரல் 1 முதல் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகமானது. இந்தியாவில் இனி “Cashless Transaction” எனும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தான் ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. சமீபத்திய புள்ளி விபரங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் கடந்த காலத்தை விட அதிகமாகியுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில்  யுபிஐ எனப்படும் பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கிய நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளை கொண்ட  QR Code அட்டைகளுடன் வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க  தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது யுபிஐ கணக்கிலிருந்து வியாபாரிகளுக்கு ரூ.2000 க்கும் மேல் பணம் செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது.

தேசிய பரிவர்த்தனை கழகத்தின்  இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேபோல எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் போன்றவற்றிர்க்கு  0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%,  Mutual Fund, அரசு, காப்பீடு மற்றும் ரயில்வே துறைக்கு  1% ஆக கட்டணம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தனி நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும் போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண விதிமுறைகள் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும்  கூகுள் பே, போன்பே, பேடிஎம் , பாரத் பே போன்ற நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்கள் அல்லது ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் போன்றவற்றால் பரிவர்த்தனைகள் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.