விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்: உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு!

கோவை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 5 உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. 5 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் கடந்த 14ஆம்…

கோவை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 5 உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. 5 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் கடந்த 14ஆம் தேதி கோவை சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்ற பாலமுருகனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டதை அடுத்து அவரது உடல் உறுப்புகளான சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், உள்ளிட்டவை ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. இதயம், நுரையீரல், மற்றும் கல்லீரல் ஆகிய மூன்றும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.

சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனைக்கும் மற்றொன்று சேலம் அரசு
மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. மூளைச்சாவடைந்த பாலமுருகனின்
உறவினர்களின் ஒப்புதலின் அடிப்படையில் அவரது உடல் உறுப்புகள் 5 பேருக்கு
வழங்கப்பட்டு ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.