அருள்நிதி நடிப்பில் வெளியாகவுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ‘நடிகர் சிலம்பரசன்’ படக்குழுவை பாராட்டியுள்ளார்.
நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “கழுவேத்தி மூர்க்கன்”. துஷாரா விஜயன், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம், மே 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘ராட்சசி’ படத்தை இயக்குநர் சை.கௌதம்ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.
அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ’டாடா’ திரைப்படத்தின் தயாரிப்பாளரே, கழுவேத்தி மூர்க்கனையும் தயாரித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் ‘கழுவேத்தி மூர்க்கன்’ டிரெய்லரை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.
https://twitter.com/SilambarasanTR_/status/1659446376714080257?s=20







