சென்னையில் பெற்ற தாயை மகனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம், அவரது தாய் சுபைதா பேகம் இருவரும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர். இரவு நேரத்தில் சுபேதா பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் 3 வது தளத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அப்துல் கரீம் ஒரு கத்தியை கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
அருகில் தாய் சுபைதா பேகம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அங்கிருந்தோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்குப் பின்னர் மகன் அப்துல் கரீமை கைது செய்தனர். அவர் என்ன காரணத்திற்காக தாயை கொலை செய்தார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







