2020ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை எவை?

2020ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளில் ஐபிஎல் முதலிடம் பிடித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. ரசிகர்கள் இல்லாமல் நடந்த முதல் போட்டி என்பதால்…

2020ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளில் ஐபிஎல் முதலிடம் பிடித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. ரசிகர்கள் இல்லாமல் நடந்த முதல் போட்டி என்பதால் இணையத்தில் ஏராளமானோர் இதனை கண்டு ரசித்தனர். 2020ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவைகளில் ஐபிஎல் முதலிடத்தை பிடித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவையே ஆட்டிப்படைத்த போதிலும், அதுதொடர்பான கூகுள் தேடல்களை விட ஐபிஎல் தான் முன்னிலை வகிக்கிறது.

கொரோனா பாதிப்பு குறித்த தேடல்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. இதுமட்டுமல்லாமல் Cheese தயாரிப்பது, டல்கோனா காஃபி தயாரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்ததால், சமையல் தொடர்பான தேடல்கள் அதிகம் இடம்பிடித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அதேபோல் How to மற்றும் What is போன்ற வார்த்தைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மூடப்பட்டதால் ஊழியர்கள் ஏராளமானோர் கூகுளை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply