ஊழல் புகார்; திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயார், அமைச்சர் செங்கோட்டையன்!

ஊழல் புகார் விவகாரத்தில் திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயக்கம் காட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் மாற்று கட்சியினை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் செங்கோட்டையன்…

ஊழல் புகார் விவகாரத்தில் திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயக்கம் காட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் மாற்று கட்சியினை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து தமிழக முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்தார். மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆகியோரின் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளி திறப்பது குறித்த முடிவுக்கு வர முடியும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஊழல் விவகாரம் தொடர்பாக, திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயக்கம் காட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply