முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்  போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவிலில் சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. அதில் புனித கபிரியேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி  ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் 14 வயது மாணவிக்கு ,மாணவி வீட்டின் அருகே வசித்து வரும் கொத்தனார் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் தவறான முறையில்  தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த 15 ஆம் தேதி காலை 11:30 மணி அளவில் மன உடைசலுக்கு ஆளான மாணவி   பள்ளியின் முதல் தளத்திலிருந்து குதித்துள்ளார். இதில் மாணவிக்கு  இடுப்பு பகுதியில் காயம் ஏற்படவே உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக அய்யம்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.மாணவி அளித்த புகாரினை தொடர்ந்து மாணவி வீட்டின் அருகே வசித்து வரும்  கொத்தனார் வேலை பார்க்கும் கண்ணன் (45) என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்

Gayathri Venkatesan

அதிமுகவின் நலத்திட்டங்கள் அறிவிப்பு என்பது வெறும் காகித பூ : ப.சிதம்பரம்!

Halley Karthik

நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி- அன்புமணி ராமதாஸ்

G SaravanaKumar