உண்மை தகவல்களை மறைத்து காப்பீடு எடுத்ததாக கூறி காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த எல்ஐசி நிறுவனத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன் 2 மாதங்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திவ்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2009 மற்றும்
2010ம் ஆண்டுகளில் தனது தந்தை 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு
காப்பீடுகள் எடுத்தேன். இந்நிலையில் எனது தந்தை உடல் நலக் குறைவால் கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து காப்பீடு தொகை கோரி விண்ணப்பித்தேன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற தகவல்களை மறைத்து காப்பீடு
எடுத்ததால் முழுத் தொகை வழங்க முடியாது. 50,000 ரூபாய் மட்டுமே
வழங்கப்படும் என்று எல்ஐசி தெரிவித்தது என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது எல்ஐசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிகிச்சை பெற்ற தகவல்களை மறைத்து
காப்பீடு பெற்றது தவறு எனவும் இதனால் முழு காப்பீடு தொகை வழங்க முடியாது
எனவும் கூறினார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், அவரது தந்தை மரணத்திற்கும்,
விபத்துக்கும் தொடர்பில்லை என தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எல்.ஐ.சி. நிறுவனத்தின் உத்தரவை ரத்து செய்து
இரண்டு மாதங்களில் காப்பீடு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.