மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல்-அன்புமணி

மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் கடந்த 1987-ம் ஆண்டு…

மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல்
என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் கடந்த 1987-ம்
ஆண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தேசிங்கு நினைவிடத்தில்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் பாமக கொடியேற்றினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல்.
இந்த தலைமுறையை மது, போதை, சூதிலிருந்து காப்பாற்ற முடியாது. அடுத்த தலைமுறையை காக்க வேண்டும். மது, போதைத் தடுப்பில் புதியதாக 20 ஆயிரம் காவலர்கள் நியமித்து கடுமையான நடவடிக்கை தேவை.

தொடர்ந்து H1N1 வைரஸ், இன்புளுயன்ஸா வைரல் ஆகியவை அதிகமாக பரவி வரும் நிலையில் அதிக நோய் தாக்கம் இருக்கும் இடங்களில் பள்ளி,கல்லூரி விடுமுறை அறிவிக்கலாம்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு சட்டம் இயற்றி நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசை இதுதொடர்பாக பலமுறை சந்தித்து வலியுறுத்தினோம். உடனடியாக இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.

இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசிய கருத்து அவரது சொந்த  கருத்தாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் என்று அன்புமணி
ராமதாஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.