வெள்ளலுார் குப்பை கிடங்கில் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக், பாலத்தீன் பைகளை அறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா என்பவர் இதில் பணி செய்து வருகிறார். அப்போது அவர் இயந்திரத்தின் மீது ஏறி சுத்தம் செய்துள்ளார். திடீரென எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் விழுந்து சிக்கியுள்ளார். அவரின் அலறல் சத்தம்கேட்டு சக ஊழியர்கள் உடனே போத்தனுார் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவலளித்தனர்.
பின்னர் போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டனர். இதில் அவர் தனது ஒரு கை, இரு கால்களையும் இழந்து உயிருக்கான ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போத்தனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இதே போல் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கண்காணிக்காமல் வருவது தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஆய்வு மேற்கொண்டு பணிகளை கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதில் ஒரு மூதாட்டி குப்பையில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனகா காளமேகன்







