ஒலிம்பிக் போட்டியை எதிர்க்கும் ஜப்பான் மக்கள்!

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடக்கவிருப்பதை அந்நாட்டு பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பானில் நாட்டின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது குறித்து அந்நாட்டின் யோமியூரி…

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடக்கவிருப்பதை அந்நாட்டு பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் நாட்டின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது குறித்து அந்நாட்டின் யோமியூரி நாளிதழின் சார்பில் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இதில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நான்காவது அலை தொடங்கியுள்ளதால், போட்டிகளை நேரில் காண மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளின் போது பணியாற்றும் தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களை அரசு எப்படி காக்க போகிறது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியதாக நாளிதழிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.