உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு செனகல் மற்றும் நெதர்லாந்து அணிகள் முன்னேறின.
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய குரூப் ஏ பிரிவில் ஈக்குவடார் அணியை செனகல் அணி எதிர்கொண்டது. ஆட்டநேர முடிவில் செனகல் அணி 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை அந்த அணி பெற்றது. மறுபுறம் தொடர்ச்சியான தோல்வி காரணமாக ஈக்வடார் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல், மற்றொரு போட்டியில் கத்தார் அணியை, நெதர்லாந்து எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோலும், இரண்டாவது பாதியில் ஒரு கோலும் நெதர்லாந்து அணி வீரர்கள் அடித்தனர். இதன் மூலம் இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றிப் பெற்று, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் கத்தார் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது.
உலகக்கோப்பை தொடரை நடத்தும் ஒரு அணி 3 போட்டிகளிலும் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.