கடைசி ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.  இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0…

இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

ஒரு நாள் போட்டியின் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் 12.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்ட நிலையில் மழையால் பாதியில் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறக்கியது. தொடரை இழக்காமல் சமன் செய்ய இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய அழுத்தத்துடன் இந்தியா களம் இறங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில், ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியில், பின் ஆலென், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, மேட் ஹென்றி, டிம் சவுதி, லோக்கி பெர்குசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.