முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி; காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் சிங்

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியின் மிட் பீல்டர் ஹர்திக் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.

2023-ம் ஆண்டுக்கான 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர்  ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்  நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. 2018-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலையடுத்து உலக கோப்பை போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்ல

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், குரூப் D பிரிவில் உள்ள இந்திய அணி மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்  நாளை நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்நிலையில் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் மிட் பீல்டர் ஹர்திக் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து திடிரென வெளியேறினார் தசை பிடிப்பு காயம் காரணமாக வெளியேறிய அவருக்கு பதிலாக, இந்திய அணியில் மிட் பீல்டர் ராஜ் குமார் பால் சேர்க்கப்பட்டுள்ளதாக  இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முக்கிய வீரரான ஹர்திக் சிங்கிற்கு  இங்கிலாந்து அணியுடனான கடைசி ஆட்டத்தில் தொடையில் ஏற்ப்பட்ட காயம் ஏற்ப்பட்டது. ஹர்திக் சிங் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய ஹாக்கி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வடிவேலுவை தொடர்ந்து இயக்குநர் சுராஜூக்கும் கொரோனா

Halley Karthik

குஜராத் தேர்தல்; 135 பேர் பலியான பால விபத்து நடந்த மோர்பியில் பாஜக முன்னிலை

G SaravanaKumar

இந்திய விமானங்களுக்கு இலங்கையில் தடை!