வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மற்ற இந்திய மாநிலங்களில் உரிய பாதுகாப்போ குறைந்தபட்ச மரியாதையோ இல்லை என இனவெறி தாக்குதலுக்கு சகோதரனை பறிகொடுத்த மைக்கேல் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த இனவெறி கொலைக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம். பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.







