தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விருப்பம் – புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா

தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள எஸ்.வி. கங்காபுர்வாலாவுக்கு, உயர்…

தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள எஸ்.வி. கங்காபுர்வாலாவுக்கு, உயர் நீதிமன்ற வளாக கூட்டஅரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் வரவேற்புரையை தொடர்ந்து, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா ஏற்புரையாற்றினார்.

தமிழில் வணக்கம் கூறி பேச்சை தொடங்கிய அவர், பல சான்றோர்களையும், கலை கலாச்சார செறிவு கொண்ட தமிழ்நாட்டில் பணியாற்றுவதை கவுரவமாக கருதுவதாக தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றம், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதே பெருமையை தொடர்ந்து கொண்டு செல்லப்படும் எனவும் உறுதி கூறினார். மேலும், உயர்நீதிமன்றம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லப்படும் எனவும் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தெரிவித்தார்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.