உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது 200 ஆண்டு பழமை வாய்ந்த கார்த்திக் சுவாமி திருக்கோயில்…
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கார்த்திக் சுவாமி திருக்கோயில் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கோயிலுக்கு ஏராளமானோர் ஆன்மீக சுற்றுலா தலமாக வந்து செல்கின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்திலேயே கார்த்திக் சுவாமிக்கு உள்ள ஒரே கோயில் இதுவாகும். இங்கு முருகன் கோயில்களைப் போல் பாரம்பரிய முறையில் வழிபாட்டு முறை நடைபெறுகிறது. ருத்ரபிரயாக்கிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலுக்கு செல்வதற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் மலை பயணத்தை தொடர வேண்டும். மலைப்பயணம் எளிதல்ல சற்று கடினமாக தான் இருக்கும். இந்தத் திருக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 3048 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக் கோயிலை சுற்றி இமயமலை தொடர் சூழ்ந்துள்ளது.
இந்த கோயிலின் மலைமேல் இருந்து பார்ப்பதற்கு என்ன தவம் செய்தோமோ என மனதில் தோன்றுகிறது. இந்தப் பயணத்தின் முடிவில் கேதார்நாத் டோம், சௌகம்பா சிகரம், நீலகண்ட பர்வத், துரோணகிரி, திரிசூல்,நந்தா தேவி மற்றும் மேரு & சுமேரு பர்வத் ஆகியவற்றைக் காணலாம்.
பூலோகத்தை முதலில் சுற்றி வருபவருக்கே பெற்றோரை வணங்குவதற்கு வாய்ப்பு என விநாயகர், முருகனுக்கு இடையே போட்டி வைக்கிறார் சிவபெருமான். இக் போட்டியில் விநாயகர் பெற்றோரேயே உலகம் என சுற்றி வந்து வெற்றி பெற்றார்.
இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் தன்னுடைய எலும்புகளை தந்தைக்கும், தன்னுடைய சதைகளை தாய்க்கும் கொடுத்துவிட்டாதாக புராணங்கள் கூறுகின்றன. இன்றைக்கும் இக் கோயிலில் உள்ள கார்த்திகேய கடவுள் எலும்பு வடிவில் காட்சியளித்து வருகிறார்.







