வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், சிவகாமிபுரம், சுரண்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு…

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், சிவகாமிபுரம், சுரண்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு பூ விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, ரோஜா பூ, கனகாம்பரப்பூ, கேந்தி பூ, சம்மங்கி பூ, வாடாமல்லி உள்ளிட்ட பூக்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

இங்கு பூக்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ 350 ரூபாய் முதல் 400 ரூபாய் விற்பனை விற்பனையானது. இந்நிலையில் நாளை வைகாசி விசாகம் என்பதால், இந்த சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ 1000 ரூபாய்க்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ 1200 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேந்தி பூ 50 ரூபாய்க்கு, ஒரு கிலோ கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.