தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்ற தவெக ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
பெரும்பான்மைக்காக இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆட்சியமைக்க அழைக்க கோரி தமிழ் நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. மேலும் ஆளுநரை சந்திக்க நேரமும் கேட்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மே 7 ஆம் தேதி பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பதவியேற்பு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதனையொட்டி எம்.எல்.ஏ.க்களை 3 நாட்களுக்கு சென்னையிலேயே இருக்குமாறு த.வெ.க. தலைமை அறிவுறுத்தியிருப்பதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







