ஆட்சியமைக்க தீவிரம் காட்டும் விஜய்; நாளை ஆளுநரை சந்திக்க திட்டம்…!

தவெக தலைவர் விஜய் நாளை , தமிழ் நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க கோருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையானாதால் தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 இடங்கள் வேண்டும்.

இதற்காக காங்கிரஸ் மற்றும் பாமகவிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆட்சியமைப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று விஜய் தலைமையில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழு தலைவராக விஜயை தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் தவெக தலைவர் விஜய் நாளை , தமிழ் நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க கோருவார் என்றும் இதற்காக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழ் நாடு தவெக தலைவர் விஜய் ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.