முக்கியச் செய்திகள் மழை

மழையால் சேதமடைந்த சாலைகள்; 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்படும்

மழையால் சேதமடைந்த சாலைகளை, 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைப்போம் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “திமுகவில் தலைவராக இருப்பவர் என்ன நினைக்கின்றாரோ அது தான் நடக்கும். சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை அமைத்தால் மரங்களை வெட்ட வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால், 10 மரம் நட்டு தொடர்ந்து பராமரிப்போம்.

நெடுஞ்சாலைகளின் தரத்தை ஆய்வு செய்யும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகம் விரைவில் தமிழ்நாட்டில் அமைய உள்ளது. கடந்த ஆட்சியில் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் கெட்டுப்போய் விட்டனர். நல்ல ஒப்பந்ததாரர்கள் கிடைத்த உடன் சாலைகளை மேம்படுத்துவது, விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கும்.

மழையால் பழுதடைந்த சாலைகள் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

Vandhana

ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை; போலீசார் விசாரணை

Saravana Kumar

குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்