வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது வந்தது.
இந்நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்ற படுகின்றது. இதனால், தாமிரபரணி, கோதையார், பரளியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பல கிராமங்கள் தனி தீவாக காட்சி அளிக்கின்றது.
இந்த நிலையில் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. திற்பரப்பு அருவியில் பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை, கழுகு பார்வையில் பதிவு செய்துள்ளது நியூஸ் 7 தமிழ்.







