தஞ்சாவூர் அருகே மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தில் உள்ள சாலைகள் மண் சாலைகளாகவே உள்ளதால் மழைக்காலங்களில் அந்த மண்சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் அந்த மண்சாலை வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதையடுத்து அந்தப் பகுதியில் தார்ச்சாலை அமைக்கக்கோரி 30 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமென்றாலும் டிராக்டர் மூலமாக மட்டுமே செல்ல முடிவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து தார்ச்சாலை அமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் மண்சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.







