பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் இனி ஒற்றை ஆதிக்கம் இருக்காது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், அமைச்சர் ஏ.வ வேலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி, புதுக்கோடை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை, ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, திருச்சியில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அண்ணா சிலையில் இருந்து நீதிமன்றம் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். எனக்கூறினார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் இனி ஒற்றை ஆதிக்கம் இருக்காது எனக்கூறிய அவர், திருச்சி மதுரை, திருநெல்வேலி, கோவை, சென்னை ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் அனைத்துப் பணிகளிலும் பரவலாக ஒப்பந்தம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்படும் எனக்கூறினார்.
மேலும் மாநில நெடுஞ்சாலை துறை சாலைகளின் தரத்தை போல் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








