முக்கியச் செய்திகள் சினிமா

பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’: புது அப்டேட் வெளியிட்ட படக்குழு

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படம் குறித்த புது அப்டேட்டை அந்தப் படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். ’பாகுபலி’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.  இப்போது இவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில், ஐந்து மொழிகளில் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள பீரியட் படம், ’ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ண குமார் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

கிருஷ்ணம் ராஜூ, சச்சின் கடேகர், பிரியதர்ஷினி, முரளி சர்மா, பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீ, சத்யன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, 1970 ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இதன் ஷூட்டிங், இத்தாலி, ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நடந்தது. ஐதராபாத்திலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளது.

பேண்டஸி காதல் கதையான இதில் பிரபாஸ் விக்ரமாதித்யா ஆகவும் பூஜா ஹெக்டே பிரேரனாவாகவும் நடித்துள்ளனர். ஜூலை 30 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி, அதாவது பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடல், வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என ட்விட்டரில் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
…….

 

Advertisement:
SHARE

Related posts

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தேர்தல் பரப்புரை!

Halley karthi

தஞ்சையை சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை: நீலமேகம்

Saravana Kumar

கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்

Halley karthi