தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் அமமுக…? – சூசகமாக பதிலளித்த நயினார் நாகேந்திரன்….!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையுமா என்று ஜன. 23ம் தேதி பொதுக்கூட்டத்தில் தெரியும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நிபின் போட்டியின்றி பொறுப்பேற்றுள்ளார் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. இன்னும் பல கட்சிகள்  கூட்டணியில் இணையும்” என்றார்.

தொடர்ந்து அமமுக கட்சி கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து தற்போது நான் எந்த ஒரு கருத்தையும் கூற முடியாது 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் இணைவார்கள் அப்போது தெரிந்து கொள்ளலாம்.

தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரைக்கும் மகாராஷ்டிரா அரியான உள்ளிட்ட பல மாநிலங்களில் வெற்றி பெற்று இருக்கின்றோம் கேரளாவில் கூட உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றோம். அதேபோன்று தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் ஆதரவளித்தாலும் அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்வோம். நாட்டு மக்களின் நலன் கருதி யார் ஆதரவளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்வோம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.