‘ஜன நாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…..!

ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம்  ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜன.9 ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கவதில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே படத்திற்கு சான்றிதழ் வழங்ககோரி படத்தயரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு ‘U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அம்மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்ச நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து, இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.

அதன் படி ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்ளையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.