இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற போரானது டிரம்பின் அமைதி திட்டம் மூலம் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து காசாவில் நிவாரண மற்றும் மீட்டுருவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண அமைப்பு (UNRWA) இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காசா மற்றும் மேற்கு கரை பகுதி பாலஸ்தீனர்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை உதவிகளை இந்த அமைப்பு வழங்கி வருகின்றது.
ஆனால் இந்த அமைப்பு பாலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் அரசு குற்றாம் சாட்டி வருகின்றது.
இந்த நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண அமைப்பு (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் இடிக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டமீறல் என்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக UNRWA வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தளமான UNRWA-வின் தலைமையகத்தை இன்று அதிகாலை இஸ்ரேலியப் படைகள் தாக்கின. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உறுப்பினர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ், வளாகத்திற்குள் நுழைந்த புல்டோசர்கள் அங்கிருந்த இருந்த கட்டிடங்களை இடிக்கத் தொடங்கின.
ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச விதி அடிப்படையில் இஸ்ரேலானது ஐ.நா. வளாகத்தின் மீற முடியாத தன்மையைப் பாதுகாக்கவும் மதிக்கவும் கடமைப்பட்டுள்ளது.
ஜனவரி 12 அன்று, கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு UNRWA சுகாதார மையத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் புகுந்து அதை மூட உத்தரவிட்டன. சுகாதாரம் மற்றும் கல்வி கட்டிடங்கள் உட்பட UNRWA வசதிகளுக்கான நீர், மின்சாரம் ஆகியவை வரும் வாரங்களில் துண்டிக்கப்பட உள்ளன. இது டிசம்பர் மாதம் இஸ்ரேலிய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் நேரடி விளைவாகும். மேலும் இது 2024 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட UNRWA எதிர்ப்புச் சட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது







