சட்டபேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில் சட்டபேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம்…

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில் சட்டபேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு கூடுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022 ஜூலை 11 இல் அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பினை தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வானதாக சபாநாயகருக்கு அதிமுக  சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, செப்டம்பர் 22 ஆம் தேதி அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரை மீண்டும் சந்தித்து கடிதம் அளித்தனர்.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருகில் ஆர்.பி.உதயகுமாருக்கு இடம் அளிக்கப்படுமா? முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல் வரிசையிலே இடம் ஒதுக்கப்படுமா? அல்லது கடந்த கூட்டத்தொடர்களைப் போன்று மாற்றமின்றி நீடிப்பா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.