ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அதில், “கன்னியாகுமரி…

ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்
தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அதில், “கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு, அண்ணாநகர் பகுதியில்
500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பில் 5 சென்ட்
இடம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், அப்பகுதியிலுள்ள சிலர் இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஏழை குழந்தைகள் படிப்பதற்காக அங்கன்வாடி
கட்டிடம் கட்டினால் அப்பகுதியிலுள்ள பொது மக்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், முறையான அனுமதி இல்லாமல் இப்பகுதியில் விநாயகர் கோவில் கட்டிடம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, விநாயகர் கோயிலுக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை மீட்டு அப்பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில்
கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு
வந்தது.

அப்போது நீதிபதிகள், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாது ஏன்? பின்னர் ஏப்படி அந்த இடத்தில் கோவில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன்20க்கு ஒத்திவைத்தனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.