சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்தாதது ஏன் என்பதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்கவையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் உயர்நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் பிராந்திய மொழி” குறித்தும், பிராந்திய மொழியை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க கோரி ஏதேனும் மாநில அரசிடம் இருந்து பரிந்துரை கிடைத்துள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!
இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் அளித்துள்ள பதிலில், இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 348 (1)ன் கீழ் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆனால், அரசியலமைப்பு சட்டம் 348 (1) (a) ன் கீழ் மாநில உயர்நீதிமன்றங்கள் உரிய அனுமதி பெற்று வழக்காடு மொழியை பிராந்திய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். உதாரணமாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழி பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மத்திய அரசுக்கு, தமிழ்நாடு, குஜராத், சட்டிஸ்கர், மேற்குவங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அவரவர் மாநிலத்தின் தாய் மொழியை பயன்படுத்துவதற்கு பரிந்துரைகள் வந்துள்ளன. ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் மாநிலத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக எழுத்துப் பூர்வபதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழக அரசிடம் இருந்து மீண்டும் ஒரு கோரிக்கை கடிதம் பெறப்பட்டதாகவும், அதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2வது கோரிக்கையின் மீதும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அனுமதி அளிக்க வேண்டாம் என கூறியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது பதிலில் தெரிவித்துள்ளார்.