‘காளிதாஸ் 2’ பட டிரெய்லர் வெளியீடு……..!

பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

காதல், வெயில், பழனி, எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் பரத். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ‘காளிதாஸ்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

ஸ்ரீ செந்தில் இயக்கிருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘காளிதாஸ்’ 2-ம் பாகம் உருவாகியுள்ளது. ஸ்கை பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பரத், அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், ‘காளிதாஸ் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.