உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று ’வாட்ஸ் அப்’. மெட்டா நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பவும், கால் செய்யவும், வீடியோ கால் செய்யவும் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செல்போன் எண்ணுக்கு பதிலாக UserName அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் படி, தனித்துவமான UserName-களை பயன்படுத்தி செய்திகளை அனுப்பவும், குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் இந்த அம்சத்தை வாட்ஸ் அப் இந்த ஆண்டின் மத்தியில் அதாவது ஜூன் மாதம் போன்று அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஒரு Chatting-கை தொடங்க மக்கள் இனி தனிப்பட்ட தொடர்பு விவரங்களைப் பகிரத் தேவையில்லை எனவும் இந்த அம்சம் வாயிலாக பயனயின் Privacy-யை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் இந்த புதிய அம்சமான UserName-களை, ஒரு optional privacy feature- ஆக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி பயனர்கள் UserName மூலம் தொடர்பு கொள்வதா அல்லது தங்கள் செல்போன் எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்துவதா என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும். மேலும் ஒருவரிடம் ஏற்கனவே உங்கள் செல்போன் எண் இருந்தால், அவர்களால் வழக்கம் போல் உங்களைக் கண்டுபிடித்துத் தொடர்புகொள்ள முடியும்.
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற மெட்டா நிறுவனத்தின் மற்ற செயலிகளில் ஏற்கனவே UserName அம்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.







