மோடி குறித்த அவதூறு பேச்சு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படிக்கவும் : உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகாதது ஏன்? மத்திய அரசு விளக்கம்
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ராகுல் காந்திக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
BJP's targeting of opposition parties has now landed in trampling of democratic rights and such atrocities will see its end.
I spoke with brother #RahulGandhi and conveyed my solidarity. I'm confident that justice will win ultimately! (2/2)
— M.K.Stalin (@mkstalin) March 23, 2023
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ராகுல் காந்தியை குற்றவாளி என தீர்ப்பு அளித்திருப்பது வருந்தத்தக்கது. எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக, இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும். இறுதியில் நீதி வெல்லும் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மநீக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன்! நீங்கள் இதுபோல் ஏராளமான சோதனைகளையும், நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.







